தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் குடும்பத்தினருடன் ஓபிஎஸ் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது தம்பி ஆகியோர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது தம்பி ஆகியோர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குலதெய்வம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை தனது தம்பி ராஜா, மகன் பிரதீப், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து யானைக்கு காய்கறி வழங்கிய விட்டு ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனது குடும்பத்தினர் பேரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குடும்பத்தினருடன் வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் குலதெய்வம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கதிரவன், பாலகங்காதரன், தெய்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். இதில் வழக்குரைஞர் கண்ணன், ராஜபாளையம் முருகையா பாண்டியன் மற்றும் கான்சாபுரம் கண்ணன், ராமகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT