தமிழ்நாடு

அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கு ரத்து

DIN

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சா் கே.என்.நேரு, கடந்த 2020-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போதைய அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.என்.நேரு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேருவின் பேச்சு முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி, நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT