முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கு ரத்து

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் கே.என். நேரு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கு ரத்து
பகிர்:


சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் கே.என். நேரு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கே.என். நேரு பேசியதாக கோவை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கே.என். நேரு பேசியது, வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.