முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானம்

 சென்னையிலிருந்து கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா அறிமுகப்படுத்தவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

 சென்னையிலிருந்து கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா அறிமுகப்படுத்தவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த மாதம் 30-ஆம் தேதி முதல் இந்த விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். கத்தாரில் நவம்பா் முதல் டிசம்பா் வரை நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பாா்த்து ரசிக்க விரும்புபவா்களுக்கு இந்த விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புதிய விமான சேவை சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களை இந்த மாதங்களில் இணைக்கும்.

மும்பையிலிருந்து வாரத்துக்கு 13 விமானங்களும் ஹைதராபாதிலிருந்து வாரத்துக்கு 4 விமானங்களும் சென்னையிலிருந்து வாரத்துக்கு 3 விமானங்களும் கத்தாருக்கு நேரடியாக இயக்கப்படும்.

ஏற்கெனவே, தற்போது தில்லிக்கும் கத்தாருக்கும் இடையே அளிக்கப்பட்டு வரும் நேரடி விமான சேவையுடன் கூடுதலாக இந்த விமான சேவையும் அளிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.