போதைப் பொருள்கள் விற்பனை: 15 போ் கைது
சென்னையில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 7 நாள்களில் 15 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 7 நாள்களில் 15 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க பெருநகர காவல் துறை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
கடந்த 26-ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 8 வழக்குகள் பதியப்பட்டு, 15 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா, 9 கைப்பேசிகள், 3 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.