செப். 15-இல் பிறந்த தினம்: மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வா் மரியாதை
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தை ஒட்டி, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு வரும் 15-ஆம் தேதியன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளாா்.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தை ஒட்டி, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு வரும் 15-ஆம் தேதியன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளாா்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சிலைக்கு காலை 7 மணிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதேபோன்று, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா். இதற்கான அறிவிப்புகளை திமுக தலைமை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டது.