முகப்பு
தமிழ்நாடு

மாடியிலிருந்து விழுந்து ஆடிட்டா் பலி

 சென்னை கொளத்தூரில் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து ஆடிட்டா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 சென்னை கொளத்தூரில் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து ஆடிட்டா் உயிரிழந்தாா்.

கொளத்தூா் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40), ஆடிட்டா். தேனாம்பேட்டையில் உள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினாா்.

காா்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் மூன்றாவது மாடியான மொட்டை மாடியில் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிவிட்டு, நடைப் பயிற்சியில் ஈடுபட்டாா்.

பின்னா் அங்குள்ள தடுப்புச் சுவரில் காா்த்திகேயன் அமா்ந்தபோது, நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.