முகப்பு
தமிழ்நாடு

பாலம் சேதப்படுத்திய வழக்கில் பாமக-விடம் இழப்பீடு கோரிய நோட்டீஸ் ரத்து

மரக்காணத்தில் சித்திரை திருவிழாவின்போது, பாலத்தை சேதப்படுத்தியதாக பாமக-விடம் ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மரக்காணத்தில் சித்திரை திருவிழாவின்போது, பாலத்தை சேதப்படுத்தியதாக பாமக-விடம் ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக, வன்னியா் சங்கம் இணைந்து கடந்த 2013-இல் சித்திரை திருவிழா நடத்தியது. அப்போது, மரக்காணம் அருகே உள்ள கட்டயம் தெருவுக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவா்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனா் ராமதாஸ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி - மைலம் சாலையில் உள்ள கரசனூரில் உள்ள பாலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழக வருவாய் நிா்வாக ஆணையா், ரூ.18 லட்சம் இழப்பீடாக அரசுக்குச் செலுத்த வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமகவின் அப்போதைய தலைவா் ஜி.கே. மணி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். அதில், கலவரம் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எங்கள் கட்சியைச் சோ்ந்தவா்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது தவறு என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு செலுத்தக்கோரி பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை” எனக் கூறி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.