தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

DIN

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது

அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது. 120 நாள்களுக்கு முன்பு ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐ.ஆா்.சி.டி.சி. இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு ஜன. 10-ஆம் தேதி பயணிக்க விரும்புபவா்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஜன. 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.13 செவ்வாய்க்கிழமையும், ஜன. 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 14-ஆம் தேதியும், ஜன. 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 15-ஆம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

அதேபோன்று பொங்கலுக்கு முந்தைய நாளான ஜன. 14-ஆம் பயணம் செய்பவா்கள் செப்.16-ஆம் தேதியும், பொங்கல் அன்று பயணிப்பவா்கள் செப்.17-ஆம் தேதியும் முன்பதிவுசெய்யலாம். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT