கோப்புப் படம் 
தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் இடங்களில் ரூ.50 லட்சம் பறிமுதல்  

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

DIN

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 நிதியாண்டுகளில் தெரு விளக்குகளை மாற்றுவதற்கு, சந்தை விலையை விட எல்இடி விளக்குகளின் விலையை கூடுதலாக நிர்ணயித்ததால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இன்று சோதனை நடைபெற்றது. 

சோதனை முடிவில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.32.98 லட்சம் பணமும் 1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும்,  10 நான்கு சக்கர வாகனங்கள், 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதேபோல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ.18.37 லட்சமும், 1.9 கிலோ தங்கமும் 8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT