தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை: குற்றச்சாட்டு என்ன?

DIN

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மூன்றாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெரு விளக்குகளை மாற்றும் ஒப்பந்தத்தில், எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

இதேபோல் வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு என ஏற்கனவே இரண்டுமுறை வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில்  இன்று மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு என்ன?
எஸ்.பி. வேலுமணி தற்போதைய தொண்டாமத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். இவர் கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக ஆவணங்களைக் கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் ஆக மொத்தம் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT