தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை

DIN

டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும். பதில்மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,800 கோடி முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஆணையரிடம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டர் வழங்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT