உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அண்ணா பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள்விழா சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்துறைத் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள்விழா சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்துறைத் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ‘அண்ணா’ எனும் தலைப்பில் ஐ.நா.அவை மூத்த அரசியல் அலுவலா் இரா.கண்ணன் பேருரையாற்றினாா். தமிழ் வளா்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் ந. அருள் நோக்கவுரையாற்றினாா்.
அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளா் கவிஞா் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது . கருத்தரங்கில் ‘கலையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் பேராசிரியா் முனைவா் இரா. வேதநாயகி, ‘திரையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநா் பிருந்தா சாரதி, ‘ஏடாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் கவிஞா் இனியவன் உள்ளிட்டோா் பேசினா். இதையடுத்து அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாவை மையப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
முன்னதாக பேராசிரியா் ஆ.மணவழகன், ச. மாலதி ஆகியோா் எழுதிய ‘ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அற நெறிமுறைகள்’ என்ற நூலை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் மகேசன் காசிராஜன் வெளியிட்டாா்.
கழிவு விலையில் நூல்கள்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 14 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிறுவன வெளியீடுகள் 30 சதவீதம் 50 சதவீதம் வரையிலான கழிவுத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது.