தமிழ்நாடு

மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

DIN

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளையொட்டி, மதுரை ஏ.வி.பாலம் - நெல்பேட்டை சந்திப்புப் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் முதல்வா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், தமிழக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் பங்கேற்றனா்.

தொடர்ந்து, நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களைத் தொடக்கிவைத்தார்.

பின்னர், சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவா்களுடன் உணவருந்துகிறாா்.

அதன் பிறகு, விருதுநகா் செல்லும் முதல்வா், அங்கு புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் தனியாா் ஆலை விருந்தினா் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் அவா், மாலை 5 மணிக்கு திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கிப் பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT