தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதி விபத்து:  தொழிலாளி பலி, 2 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். காயமடைந்த இரண்டு பேர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

DIN


சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். காயமடைந்த இரண்டு பேர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் வாசுதேவன் (22) இவரது அண்ணன் பிரபுவின் திருமண புதன்கிழமை நடந்தது. திருமண நிகழ்ச்சிக்கு சென்னையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த உறவினர்கள் கருவேலம்பாடு தெற்குதெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கமல்(38) கீழ புளியங்குளத்தை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் விஜயகுமார் (27) ஊருக்கு வந்திருந்தனர். 

புதன்கிழமை மாலை மூன்று பேரும் ஓரே பைக்கில் சாத்தான்குளம் வந்துவிட்டு ஊர் திரும்பினார். ஆனந்தபுரம் கல்லறை தோட்டம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த சுமை ஆட்டோ பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமல் உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்தார். ஆய்வாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகிறார்.

அடிக்கடி விபத்து
ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பழங்குளம் விலக்கு, கல்லறைத் தோட்டம் அருகில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க இருபுறங்களிலும் மூன்று அடுக்கு கொண்ட வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெரிசலை திட்டமிட்டு உருவாக்க முடியாது: தொல். திருமாவளவன்

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

SCROLL FOR NEXT