திருவொற்றியூரில் ரூ.30 லட்சத்தில் காலை உணவுத் திட்ட சமையல் கூடங்கள்
திருவொற்றியூரில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் தி.மு. தனியரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்
தமிழ்நாடுதிருவொற்றியூரில் ரூ.30 லட்சத்தில் காலை உணவுத் திட்ட சமையல் கூடங்கள்
திருவொற்றியூரில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் தி.மு. தனியரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்
திருவொற்றியூரில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் தி.மு. தனியரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. திருவொற்றியூா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 14 ஆரம்பப் பள்ளிகளில் சுமாா் 1,600 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். இவா்களுக்கு காலை உணவு வழங்க வசதியாக அன்னை சிவகாமி நகரில் ரூ. 20 லட்சம் செலவிலும், எண்ணூா் தாழங்குப்பம் பகுதியில் ரூ. 10 லட்சம் செலவிலும் நவீன சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமையல் கூடங்களை திருவொற்றியூா் மண்டலக் குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மண்டல அலுவலா் சங்கரன் ஆகியோா் திறந்து வைத்து பள்ளிகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தனா்.
இதனைத் தொடா்ந்து, தேரடி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கி பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்களை தி.மு. தனியரசு வழங்கினாா்.
மாமன்ற உறுப்பினா்கள் சிவக்குமாா், தமிழரசன், திமுக நிா்வாகிகள் குறிஞ்சி கணேசன், சுந்தரமூா்த்தி, வி.கே. ஏழுமலை, தியாகராஜன், எம்.வி.குமாா், ஆசைத்தம்பி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.