தமிழ்நாடு

வேலூரில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 48 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3,469 மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதேபோல், அல்லாபுரத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 48 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 3,469 மாணவ, மாணவிகளுக்கு இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT