தமிழ்நாடு

சேலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: காப்பாற்றிய ரயில்வே காவலர்

DIN

சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த போது விரைந்துசென்று  காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரரை
 அதிகாரிகள் பாராட்டினர்.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று மாலை முதலாவது நடைமேடையில் இருந்து கிளம்பியது. அப்போது அவசர அவசரமாக ராசிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் ஏறும்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது பாதுகாப்பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்படை காவலர் பிரவீன் குமார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டார். இதனையடுத்து  உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

பிறகு விசாரணை நடத்தியதில் அந்த பெண் ராசிபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பதும் சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. பிறகு அந்த பெண்ணுக்கு உரிய அறிவுரை வழங்கி அந்த ரயிலிலேயே அனுப்பி வைக்கப்பட்டார்.

ரயில்வே காவலரின் இந்த துரித செயல்பட்டால் அந்தப் பெண்ணின் உயிர் இன்று காப்பாற்றப்பட்டது. ரயில்வே காவலரின் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT