தமிழ்நாடு

அம்பையில் பெரியார் பிறந்த நாள் விழா

அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் 144 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் 144 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம் பூக்கடைச் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் முன்னணி அ.மணிவண்ணன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சு.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் நகராட்சித் தலைவர் திமுக நகரச் செயலர் கே.கே.சி. பிரபாகரன் மற்றும் வழக்குரைஞர் ரமேஷ், திமுக  அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், ராமையா, முத்துத்துரை காஜா மைதீன்,  சரவணன், தமிழ்ச்செல்வன், ராமசாமி, கணேசன், சிபிஐ கட்சி நகரச் செயலர் வடிவேல், ஜி.ஆர் மூர்த்தி, சிபிஎம் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீசன்  மகாதேவன், பாண்டியன், டி.ஒய்.எப்.அய். ஆனந்த், ஜவகர், முருகன், ராமசாமி, மதிமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் முத்துசாமி, திராவிடர் கழகம் ஒன்றியச் செயலர் சேகர், கருணாநிதி, பகுத்தறிவாளர் கழகம் சூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் பெரியார் பித்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT