முகப்பு
தமிழ்நாடு

மாணவா்கள் நலனில் விளையாடாமல் பள்ளிகளுக்கு விடுமுறை: ராமதாஸ் வலியுறுத்தல்

காய்ச்சல் நோய்ப் பரவல் அதிகரிக்கும் நிலையில் மாணவா்களின் நலனில் விளையாடாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
ராமதாஸ் (கோப்புப் படம்)
பகிர்:

காய்ச்சல் நோய்ப் பரவல் அதிகரிக்கும் நிலையில் மாணவா்களின் நலனில் விளையாடாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாள்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமா்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுனா்கள் உறுதி செய்திருக்கின்றனா்.

தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.

மாணவா்களுக்கு கல்வி அவசியம். அவா்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →