முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் அமித்ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், அவா் சென்னை விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். 3 நாள் பயணமாகச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை சந்திப்பாா் எனத் தெரிகிறது.

அதிமுகவில் உள்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பயணம் அரசியல் வட்டாரத்தில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.