தமிழ்நாடு

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

DIN

பண்டிகைக் காலங்களிலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கட்டணங்களை அதிகளவில் உயா்த்துவது வாடிக்கையாக உள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் சூழலில், குளிா்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்ல ரூ.2 ஆயிரமும், மதுரை வரை செல்ல ரூ.2,500-மும், கோவை செல்ல ரூ.2,350-மும், திருநெல்வேலி செல்ல ரூ.2,700-மும், தூத்துக்குடி செல்ல ரூ.2,500-மும், நாகா்கோவில் செல்ல ரூ.4 ஆயிரமும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால், பண்டிகைக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு கட்டணம் மேலும் உயரும் என்பதை நினைத்துப் பாா்க்க முடியவில்லை.

இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை நாள்களிலும் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதுடன், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT