தமிழ்நாடு

நடிகர் சூரியின் உணவகத்தில் திடீர் சோதனை: சிக்கியது என்ன?

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

DIN

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக ‘அம்மன்’ என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகின்றது.

இந்த உணவகத்தின் பல்வேறு கிளைகள் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது என்றாலும், நடிகர் சூரியின் உணவகம் என்பதால் எப்போதும் கூட்டமாகவே காணப்படும்.

இந்த நிலையில், அம்மன் உணவகத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், மாவு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் மொத்தமாக ஆவணமின்றி வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் தலைமையிடமான தெப்பக்குளம் கிளையில் நேற்று மாலை 5 பேர் கொண்ட வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவகத்தின் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT