தமிழ்நாடு

பரம்பிக்குளம் அணையில் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு

DIN

கோவை: பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்துள்ள நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

பொள்ளாச்சி அருகேவுள்ள பரம்பிக்குளம் அணையின் மூன்று மதகுகளில் நடுவில் இருந்த ஒரு மதகு நேற்றிரவு 10 மணியளவில் கழன்று விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரள பொதுபணித் துறை அதிகாரிகள், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அணையில் இருந்து வெளியேறும் நீரைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்.

முன்னதாக, அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT