மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனில் பின்தங்குகிறதா தமிழகம்? 
தமிழ்நாடு

மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனில் பின்தங்கிய தமிழகம்

ன்சிஇஆர்டி சார்பில் நாட்டில் நடைபெற்ற கல்வித்திறன் ஆய்வில், எண்களை அறியும் அடிப்படைத் திறனில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பின்தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ENS

சென்னை: என்சிஇஆர்டி சார்பில் நாட்டில் நடைபெற்ற கல்வித்திறன் ஆய்வில், எண்களை அறியும் அடிப்படைத் திறனில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பின்தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடிப்படை கற்கும் திறன் ஆய்வு - 2022 பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் மூன்றாம் வகுப்பில் பயிலும் 29 சதவீத மாணவர்கள், அடிப்படை கணிதத் திறன்கள் கூட இல்லாமல், எண்களை அடையாளம் காணுதல், பெருக்குதல், வகுத்தல் மற்றும் காலண்டரில் தேதி, மாதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதுபோன்றவற்றில் பின்தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

கல்வித் திறனில் பின்தங்கியிருக்கும் மாணவர்களில், நாட்டின் சராசரி 11 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகம் 29 சதவீதமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் 28 சதவீதத்துடனும், அசாம் 18 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் பள்ளியில் சேர்க்கப்படும் பிள்ளைகளில் நாட்டின் சராசரி 27.1 சதவீதமாக இருக்கும் நிலையில், 51.4 சதவீதமாக இருக்கும் தமிழகத்துக்கு இது மிகப்பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் அடிப்படை அறிவுத் திறனில் 48 சதவீதமும், ஆங்கில அறிவில் 43 சதவீத மாணவர்களும் பின்தங்கியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்மாய்களில் மீன்பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் செய்தவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத்தொகை

தனியாா் பள்ளிக் கட்டடங்களுக்கான அனுமதி: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

SCROLL FOR NEXT