மண்டல அளவிலான தடகளப்போட்டியில் சாதனை படைத்த கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள். 
தமிழ்நாடு

தடகள போட்டி: கொண்டையம்பள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை!

தேவியாக்குறிச்சி தனியாா் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப்போட்டியில், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

DIN


தம்மம்பட்டி: தேவியாக்குறிச்சி தனியாா் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப்போட்டியில், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வடிவேலு என்ற மாணவர் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், 9 வெள்ளிப் பதக்கங்களையும்,  4  வெண்கலப் பதக்கங்களையும் வென்று, கொண்டையம்பள்ளி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனைப் படைத்தனர். 

பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் மதிவாணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தி பாராட்டினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோன்! காஷ்மீா் எல்லையில் தேடும் பணி தீவிரம்!

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

கரூா் சம்பவம்: முழு உண்மையும் சிறப்புக் குழு விசாரணையில் வெளிவரும்! முதல்வா் ஸ்டாலின் உறுதி

ஆரணி நகராட்சி குப்பை கொட்டும் இடம் ஆய்வு!

SCROLL FOR NEXT