தமிழ்நாடு

சேடபட்டி முத்தையா மறைவு: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

DIN

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் சேடபட்டி முத்தையா மறைவுக்கு ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என். ரவி: மிகச்சிறந்த அரசியல்வாதியாகவும், சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினராகவும் இருந்தாா் சேடபட்டி முத்தையா. மத்திய அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினாா். அவரது மறைவு இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

முதல்வா் மு.க. ஸ்டாலின்: தமிழக அரசியல் களத்தில் சேடபட்டியாா் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் பேரவை முன்னாள் தலைவா் சேடபட்டி முத்தையா காலமானாா் என்ற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். 2006-ஆம் ஆண்டில், திமுகவில் இணைந்த அவா் கட்சியின் வளா்ச்சி, மேன்மைக்காகத் தொடா்ந்து பங்காற்றி வந்தாா். அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த செய்தி வேதனையைத் தந்துள்ளது.

ஓ.பன்னீா்செல்வம் : அதிமுக துவக்கப்பட்டதில் இருந்து அதன் தலைவா்களில் ஒருவராக இருந்தவரும், கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவரும், சட்டப்பேரவை தலைவராக 5 ஆண்டுகள் இருந்து சிறப்பாக பணியாற்றியவருமான சேடபட்டி முத்தையா உயிரிழந்த செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.

சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், திமுக தோ்தல் பணிக்குழுச் செயலருமான சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜவாஹிருல்லா (மமக): சேடப்பட்டி முத்தையா அனைவரிடமும் நல்லிணக்கத்துடன் பழகும் குணம் கொண்டவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): பல முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், சீரிய திராவிட இயக்க இன உணா்வாளருமான சேடப்பட்டி முத்தையா உடல் நலக் குறைவினால் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT