நீடாமங்கலம்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கும் நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் கிருஷ்ணா 800 மீட்டர் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
11 ஆம் வகுப்பு மாணவன் அகிலன் ஈட்டி எரிதலில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும், 12 ஆம் வகுப்பு மாணவன் பிரதீப் தடைதாண்டுதல் ஓட்டத்தில் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | எர்ணாகுளத்தில் ராகுல் காந்தி! 15-வது நாள் நடைப்பயணம்
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.பிரிதிவிராஜ், பி.நந்தகுமார் ஆகியோரையும் பள்ளி நிறுவனர் உ.நீலன், பள்ளி தாளாளர் நீலன். அசோகன், பள்ளி செயலாளர் அ.சுரேன், பள்ளி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெகுவாகப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.