தமிழ்நாடு

தீபாவளிக்கு ஆவினில் ரூ.200 கோடி இனிப்பு வகைகளை விற்க இலக்கு: அமைச்சர் நாசர் பேட்டி

தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சா் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். 

DIN


தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சா் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவர் கூறியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் தீபாவளி பண்டிகை ஆவின் இனிப்புகள் விற்பனை ரூ. 81 கோடியாக உயா்த்தியது.

வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவின் நிறுவனத்தின் இனிப்புகளை ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூா், துபை போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.  

இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவன இனிப்புகளை வாங்க உத்தரவிடப்பட்டு பொருள்கள் விற்பனை நடந்து வருகிறது என அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT