கோப்புப்படம் 
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    
கால்நடை மருத்துவப் படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. செப். 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் கடந்த 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. செப்டம்பர் 19 ஆம் தேதி மாலை வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். செப். 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: பினராயி விஜயன்

பாக். குடியிருப்புக் கட்டடத்தில் சமையல் எரிவாயு வெடிப்பு! 16 பேர் பலி!

இதை மட்டும் செய்யாதே..! அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர்!

நாளை(பிப். 20) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

SCROLL FOR NEXT