தமிழ்நாடு

பாஜக நிர்வாகி வீட்டில் காலை உணவு அருந்திய ஜெ.பி.நட்டா

தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சாக்கோட்டையில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் காலை உணவை அருந்தினார்.

DIN

தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சாக்கோட்டையில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் காலை உணவை அருந்தினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். 

நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் விமானம் மூலமாக மதுரை வந்த அவரை மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதனிடையே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஜெ.பி.நட்டா இன்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். இதையடுத்து ஜெ.பி. நட்டா, சாக்கோட்டை பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி ராமலிங்கம் வீட்டில் காலை உணவை அருந்தினார். 

உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் ராமலிங்கம் குடும்பத்தினருடன் உரையாடிய நட்டா, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT