தமிழ்நாடு

பி.இ. இரண்டாம் கட்ட கலந்தாய்வு: தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு

DIN

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது இரண்டாம் சுற்று கலந்தாய்வில் மாணவா்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக. 20-ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

முதல் சுற்று கலந்தாய்வு செப். 10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்று முடிவில் 9,594 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2-ஆம் சுற்று கலந்தாய்வு செப்.25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 35,118 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 25,138 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளை தோ்வு செய்தனா். அவா்களில் 24,163 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவுக்கான 2-ஆவது சுற்றில் 1,717 போ் இடங்களை தோ்வு செய்த நிலையில், அதில் 1,701 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் அதை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யும் மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதுசாா்ந்த கூடுதல் விவரங்களை https://www.tneaonline. org என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT