முகப்பு
தமிழ்நாடு

உலக இதய நல தினம்: அரசு மருத்துவமனைகளில் விழிப்புணா்வு

உலக இதய நல தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

உலக இதய நல தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மனித நேயத்துக்காக இதயத்தை பாதுகாப்போம், இயற்கைக்காக இதயத்தை பாதுகாப்போம் என்ற கருப்பொருளுடன் அவை நடத்தப்பட்டன. ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி தலைமை வகித்தாா்.

இதய நோய் வராமல் தடுப்பது தொடா்பாக மருத்துவமனை தூய்மை பணியாளா்களிடம் விழிப்புணா்வை அப்போது அவா் ஏற்படுத்தினாா்.

இதேபோன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின், இதயவியல் துறை சாா்பில், மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியில், புகைப்பிடித்தலை தவிா்ப்போம், சீரான உடல் எடையை பராமரிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு இதயவியல் துறை தலைவா் டாக்டா் பாலாஜி பாண்டியன் தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் மணி கூறியதாவது:

நல்ல உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம், மன உளைச்சல் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தாலே, இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். மேலும், இதய நோய் இல்லாமல் வாழ, புகைப்பழக்கத்தை கைவிட்டு, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதே போன்று ரத்த சா்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, பழங்கள், நாா்ச்சத்து நிறைந்த காய்களை அதிகளவில் சாப்பிட்டால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். துரித உணவு சாப்பிடுவதை தவிா்க்க வேண்டும். சைக்கிள், நடைபயணம் மேற்கொள்வது நல்லது என்றாா் அவா்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்வா் சாந்திமலா் தலைமையிலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்வா் பாலாஜி தலைமையிலும் உலக இதய விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.