முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   

Updated On : 17 ஏப்ரல், 2022 at 7:54 PM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,53,263-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,007-ஆக உயர்ந்துள்ளது.  
ஒரு நாளில் மட்டும் 14,477 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 231 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.