ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட தொண்டர்கள்!
அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
முன்னதாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.