குமுளி மலைப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கவிழ்ந்து 8 பேர் பலியான சோகம்!
தேனி மாவட்டம் குமுளி லோயர்கேம்ப் மலைச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாடுகுமுளி மலைப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கவிழ்ந்து 8 பேர் பலியான சோகம்!
தேனி மாவட்டம் குமுளி லோயர்கேம்ப் மலைச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
கம்பம்: தேனி மாவட்டம் குமுளி லோயர்கேம்ப் மலைச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு டி.என்.63 டவேரா காரில் சென்றனர். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் தரிசனம் முடித்துவிட்டு ஆண்டிபட்டி நோக்கி வெள்ளிக்கிழமை வந்தனர்.
குமுளி லோயர்கேம்ப் மலைச்சாலையில் கார் வந்தபோது இரவு நேரம் மற்றும் பனிக்காலம் என்பதால் மேக மூட்டம் அதிகமாக இருந்தது. டவேரா காரை ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (42) என்பவர் ஓட்டி வந்தார்.
வழித்துணை மாதா கோயில் அருகே செல்லும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மலைப்பள்ளத்தை நோக்கி பாய்ந்தது, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் லோயர் கேம்ப் மின்சார உற்பத்தி நிலையம் ராட்சத இரும்புக் குழாயில் மோதி நொறுங்கியது.
விபத்தில் சிக்கிய காரின் பின்னால் வந்தவர்கள் குமுளி காவல் நிலையம், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையில் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், கார் ஓட்டிய கோபாலகிருஷ்ணன், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் முனியாண்டி (55), ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலக தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் தேவதாஸ், சுப்பையா மகன் சிவக்குமார் (45), மறவபட்டி நாகப்பன் மகன் கண்ணுச்சாமி (52) ஆண்டிபட்டி சுடுகாட்டு தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் நாகராஜ் (46) கலைச்செல்வன் (44), சண்முகசுந்தர புரத்தைச்சேர்ந்த சுந்தரம் மகன் வினோத் (47) ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்த தந்தை மகன்
ஆண்டிபட்டி சந்தைப்பேட்டை, கோழிப்பண்ணை தெருவைச் சேர்ந்த நடராஜ் மகன் ராஜா (40), அவரது மகன் ஹரிஹரன் (7) இருவரும் பலத்த காயத்துடன் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.