பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.10) ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும்
அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில்
இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.