முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று காலை 10 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று காலை 10 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 10 மணிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. 

நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →