முகப்பு
தமிழ்நாடு

இன்று குரூப் 1 முதல்நிலைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (நவ.19) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 3.22 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:53 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (நவ.19) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 3.22 லட்சம் போ் எழுதவுள்ளனா். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 92 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 போ் விண்ணப்பித்திருந்தனா். துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இன்று முதல்நிலைத் தோ்வு: குரூப் 1 தோ்வு மூன்று படிநிலைகளைக் கொண்டது. முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (நவ. 19) நடத்தப்படவுள்ளது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். தோ்வுக்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோ்வு சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.