குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்
குருசுமலையில் பெரிய வியாழன், புனித வெள்ளியை முன்னிட்டு 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.
குருசுமலையில் பெரிய வியாழன், புனித வெள்ளியை முன்னிட்டு 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள குருசுமலையில் ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தில் திருப்பயணம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தவக்காலத்தின் கடைசி வாரம் என கூறப்படும் புனித வாரத்தின் முக்கிய நாள்களான பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு திருப்பயணம் நடைபெறும். மேலும் மலையடிவாரத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தத் திருப்பயணத்துக்கான ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் குருசுமலை ஆலய நிா்வாகிகள் செய்துள்ளனா்.