முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற தீர்ப்பை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை: இபிஎஸ்

நீதிமன்ற தீர்ப்பை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 18 அக்டோபர் 2022, 11:58 am IST
எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

நீதிமன்ற தீர்ப்பை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள அஞ்சி எங்களை கொல்லைப்புறமாக திமுக தலைவர் எங்களை பழிவாங்குகிறார். 

Advertisement

Advertisement

ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை  சட்டப்பேரவைத் தலைவர் மதிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.

திமுகவின் ஆதரவுடன் பன்னீர் செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன. 62 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதய குமாரை தேந்தெடுத்துள்ளனர் என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments