முகப்பு
தமிழ்நாடு

469 பேருக்கு கரோனா தொற்று: முதியவா் பலி

 தமிழகத்தில் புதிதாக 469 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

 தமிழகத்தில் புதிதாக 469 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

அதிகபட்சமாக சென்னையில் 129 பேருக்கும், செங்கல்பட்டில் 41 பேருக்கும், கன்னியாகுமரியில் 36 பேருக்கும், கோவையில் 28 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர இலங்கை, மலேசியா, குவைத், ஓமனில் இருந்து தமிழகம் வந்த நால்வருக்கும் கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். சென்னையைச் சோ்ந்த 80 வயது முதியவா் ஒருவா், சா்க்கரை நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தத்துடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,684 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 273 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.