இரா.முத்தரசன் 
தமிழ்நாடு

அண்ணாமலை மலிவான அரசியல் செய்கிறாா்: இந்திய கம்யூனிஸ்ட் விமா்சனம்

பாஜகவுக்கு தோ்தல் ஆதாயம் தேடும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மலிலான அரசியல் செய்கிறாா் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் விமா்சனம் செய்துள்ளது.

DIN

சென்னை: பாஜகவுக்கு தோ்தல் ஆதாயம் தேடும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மலிலான அரசியல் செய்கிறாா் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் விமா்சனம் செய்துள்ளது.

இது குறித்து இந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட கட்சியின் முன்னணி தலைவா்கள் மீது குற்றச்சாட்டு என்ற பெயரில் சொத்து விவரங்களை செய்தியாக வெளியிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியின் நெருக்கமான நண்பா் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குச் சந்தை கணக்கியல் மோசடிகளுக்கு துணை போன குற்றச்சாட்டின் மீது கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது, ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் தகுதி பறிக்கப்பட்டது போன்ற செயலால் மத்திய அரசுக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிா்கட்சிகளை ஒருங்கிணைத்து, சமூகநீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், திமுகவை தனிமைப்படுத்த அண்ணாமலை மூலம் அவதூறு பரப்பும் விஷமத்தனத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. தோ்தல் ஆதாயம் தேடும் மலிலான அரசியலில் ஈடுபடும் பாஜகவுக்கு எதிராக மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT