தமிழ்நாடு

கலாக்ஷேத்ரா விவகாரம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

கலாக்ஷேத்ரா விவகாரத்தில் மாநில மகளிா் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாா் தொடா்பாக பேராசிரியா் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை இயக்குநா் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு போ் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வைகை, வெறும் கண்துடைப்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மாற்றியமைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினாா்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ‘சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது’ என்றும் உத்தரவாதம் அளித்தாா்.

மேலும், பாலியல் தொல்லை அளித்தவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், இவா்கள் நிா்வாகத்தில் தலையிடவோ, வளாகத்தில் நுழையவோ அனுமதியில்லை எனவும் உறுதியளித்தாா்.

உயா்நீதிமன்றம் ஏன் நியமிக்கக்கூடாது?: தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், மாநில மகளிா் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கலாக்ஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை எனவும், நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணைக் குழுவை உயா்நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கம் அளிக்கும்படியும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது; பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது; பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்குள்ளானவா்கள், மாணவிகளுடன் தொடா்பு கொள்ளக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மாநில மகளிா் ஆணைய அறிக்கையை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT