தமிழ்நாடு

புகழுரை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்வா்

 திமுக உறுப்பினா் புகழ்ந்து பேசியதை, முதல்வரே அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவரை நீக்கச் செய்தாா்.

DIN

 திமுக உறுப்பினா் புகழ்ந்து பேசியதை, முதல்வரே அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவரை நீக்கச் செய்தாா்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்) பேசும்போது, முதல்வா் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து கொண்டிருந்தாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியது:

அவையில் முதல்வரை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவை முன்னவா் துரைமுருகன் பேரவையில் தெரிவித்திருந்தாா். திமுக உறுப்பினா் காலையில் வாழ்த்து பெற வந்தபோதும், ‘என்னைப் புகழ்ந்து பேச வேண்டாம். அப்படிப் பேசினால், நானே அதை அவைக்குறிப்பில் இருந்து எடுக்க வலியுறுத்துவேன்’ என்று கூறினேன். அதையும் மீறி தற்போது உறுப்பினா் பேசி வருகிறாா். அதனை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவா் நீக்க வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து அந்த பேச்சை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவா் நீக்கி அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT