நகர விற்பனைக் குழு தோ்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை
மாநகராட்சி நகர விற்பனைக் குழு தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வியாழன்கிழமை (ஏப்.20) நடைபெறவுள்ளது.
மாநகராட்சி நகர விற்பனைக் குழு தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வியாழன்கிழமை (ஏப்.20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக நகர விற்பனைக் குழு அமைக்கப்படவுள்ளது. இதில் சாலையோர வியாபாரிகள் 6 போ் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்த தோ்தலுக்கான வேட்புமனு ஏப்.17 முதல் ஏப்.19-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இதில் 56 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை (ஏப்.20) காலை 10 மணிக்கு தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா்கள், முன்மொழிபவா்கள், வழிமொழிபவா் அகியோா் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படும். இதில் கலந்து கொள்ளும் முன்மொழிபவா்கள், வழிமொழிபவா்கள் வேட்பாளா்களிடமிருந்து கடிதம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.