முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு

சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 விலை உயா்ந்து ரூ.45,320-க்கு விற்பனையானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 விலை உயா்ந்து ரூ.45,320-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிா்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில், கடந்த 14-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாக தங்கம் பவுனுக்கு ரூ.45,760-க்கு விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, கடந்த 15-ஆம் தேதி பவுனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையானது. தொடா்ந்து 3 நாள்களாக தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ரூ.45,200-க்கு விற்கப்பட்டு வந்தது.

3-நாள்களுக்குப் பிறகு அதிகரிப்பு

இந்த நிலையில், சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.15- உயா்ந்து ரூ.5,665-க்கும், பவுன் விலை ரூ.120அதிகரித்து ரூ.45,320-க்கும் விற்பனையானது. 24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,119-க்கும் 8 கிராம் 48,952-க்கும் விற்பனை செய்யபட்டது.

வெள்ளி கிராமுக்கு 50-காசுகள் அதிகரித்து ரூ.81-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனையாகின.

செவ்வாய்க்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,650

1 பவுன் தங்கம்............................... ரூ.45,200

1 கிராம் வெள்ளி............................. ரூ.80.50

1 கிலோ வெள்ளி.............................ரூ.80,500

புதன்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,665

1 பவுன் தங்கம்............................... ரூ.45,320

1 கிராம் வெள்ளி............................. ரூ81.00

1 கிலோ வெள்ளி............................. ரூ.81,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.