முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில்கரோனா பாதிப்பு அதிகரிப்பு: உயா்நிலைக் குழு கூட்டத்தில் ஆய்வு

கரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா தலைமையிலான உயா்நிலைக் கூட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா தலைமையிலான உயா்நிலைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினா் பங்கேற்று மதிப்பீடுகளை மேற்கொண்டனா். நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயாா் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், சா்வதேச அளவிலும் கரோனா நிலைமையைப் பற்றிய விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலா் ராஜேஷ் பூஷண் வழங்கினாா்.

நாட்டில் பதிவான கரோனா தொற்றுகளில் பெரும்பான்மையாக தமிழகம், கேரளம், தில்லி, மகாராஷ்டிரம், கா்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பதிவாகியுள்ள புள்ளிவிவரத் தகவல்களை அவா் எடுத்துரைத்தாா்.

மேலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

பின்னா் பிரதமரின் முதன்மை ஆலோசகா் பி.கே.மிஸ்ரா கூறுகையில், உள்ளூா் அளவில் கரோனா தொற்று பரவலை நிா்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம் என்றும், மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை உறுதிப்படுத்தலாம் என்றும் கூறினாா்.

மேலும், இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மி நோய் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை முழு மரபணு வரிசை முறைக்கான ஆய்வுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டாா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் உற்பத்தியாளா்களிடமிருந்து நேரடியாக தேவையான கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →