தமிழ்நாடு

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுவதை 
நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது:

சட்டப்பேரவையை மதிக்காமல் நடந்துகொள்ளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே முதல்வரின் பதிலுரையை புறக்கணித்துள்ளனர் என்று அப்பாவு பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT