அட்சய திருதியை: தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது!
நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று(சனிக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 60 குறைந்து ரூ. 5,605-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 80.40-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.